சுடச்சுட

  

  அரியலூரில் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் ஜெனிவா ஒப்பந்தத் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் அரியலூர் மாவட்டக் கிளை, இளஞ்செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சார்பில் 64- வது ஜெனிவா ஒப்பந்தத் தின விழா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  

  அரியலூர் மாவட்டத் தலைவர் அ. நல்லப்பன் தலைமை வகித்தார்.  முன்னாள் மாவட்டச் செயலர் பா. இளங்கோவன் முன்னிலை வகித்தார். அரியலூர் வருவாய்க் கோட்டாட்சியர் கணபதி விழாவைத் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அரியலூர் வட்டாட்சியர் முருகன், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி, அரியலூர் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலையரசன், பொருளாளர் துரை. செல்வராசு, இணை ஒருங்கிணைப்பாளர் ப. கனகலெட்சுமி, கே. பிரபாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியர் (பொ) மு. லெட்சுமி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் ஏ.எம். சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai