சுடச்சுட

    

    சுதந்திர தினத்தையொட்டி, அரியலூரில் செவ்வாய்க்கிழமை போலீஸாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தேசியக் கொடியேற்றி வைத்து, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொள்ளவிருக்கிறார். மேலும், சுதந்திர போராட்ட வீரர்களை கௌரவித்து, நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

    விழாவை முன்னிட்டு நடைபெற உள்ள போலீஸாரின் அணிவகுப்பு மரியாதைக்கான ஒத்திகை நிகழ்ச்சி ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இந்த ஒத்திகையில் ஆயுதப்படை காவலர்கள் மகளிர் காவலர்கள், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai