Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகேவிபத்து: இளைஞர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே பேருந்தின் டயர் வெடித்து கழன்று ஓடி இரு சக்கர வாகனம் மீது மோதியதில் இளைஞர் காயமடைந்தார்.

    ஜயங்கொண்டம் அருகே உள்ள குண்டவெளியைச் சேர்ந்தவர் ஜவகர் (33) இவர் ஜயங்கொண்டம் கடைவீதிக்கு திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.பொன்னேரி கரை அருகே வந்தபோது எதிரில் வந்த அரசுப் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து அதில் இருந்த இரும்பு வளையம் உருண்டு ஓடி ஜவகர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஜவகர் ஜயங்கொண்டம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜயங்கொண்டம் போலீஸார் பேருந்து ஓட்டுநர் தஞ்சை

    ஜபமாலைபுரத்தைச் சேர்ந்த வினோத் (29) என்பவரை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai