சுடச்சுட

  

  "நாட்டின் எதிர்காலம் மாணவ,மாணவிகள் கையில் உள்ளது'

  By அரியலூர்,  |   Published on : 14th August 2013 02:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாட்டின் எதிர்காலம் மாணவ, மாணவிகள் கையில்தான் உள்ளது என்றார் அரியலூர் வளர்ச்சிக் குழுத் தலைவர் வி.எஸ். பாலகிருஷ்ணன்.

  அரியலூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  கூட்டத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியை வை. உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவரும், அரியலூர் வளர்ச்சிக் குழுத் தலைவருமான வி. எஸ். பாலகிருஷ்ணன் பேசியது: மாணவிகள் வீட்டுப் பாடங்களை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும். விடுமுறை தினங்களில் பள்ளி ஆசிரியர்கள் நடத்தும் சிறப்பு வகுப்புகளுக்கு  மாணவிகள் தவறாமல் செல்லும் வகையில பெற்றோர் ஒத்துழைக்க வேண்டும்.

  வலிமையான தலைமுறையை உருவாக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு,  மாணவிகளுக்கு பெற்றோர்கள் துரித உணவுகளை வழங்காமல் நமது பாரம்பரியமான, சத்தான உணவுகளை வழங்க வேண்டும்.

  இந்தக் கல்வி ஆண்டில் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 100 சதவீதமாக்க மாணவிகளும், பெற்றோர்களும் ஆசிரியர்களுடன் ஒத்துழைக்க வேண்டும். நாட்டின் எதிர்காலம் மாணவ, மாணவிகள் கையில் உள்ளது என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றார் பாலகிருஸ்ணன்.

  கூட்டத்தில் பள்ளி உதவி தலைமை ஆசிரியை மேரி ஜயராணி, ஆசிரியைகள் அல்லிதேவி, எஸ்.பி. கவிதா, பிரபாவதி, ராணி, ஆசிரியர்கள் சுரேஷ்குமார், மணிமாறன், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் லோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai