சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மதுபானக் கடைகளுக்கு, சுதந்திர தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை (ஆக. 15) விடுமுறை  அறிவிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஷ் அஹமது.

    இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக (டாஸ்மாக்) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்களுக்கு, வியாழக்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்படுகிறது என்றார் அவர்.

    அரியலூர்:இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின்(டாஸ்மாக்) அனைத்து சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மது அருந்தும் கூடங்கள் வியாழக்கிழமை (ஆக.15) மூடப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai