சுடச்சுட

    

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகள்

    By அரியலூர்  |   Published on : 14th August 2013 02:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவùô - மாணவிகளுக்கான பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் தமிழ் மொழியில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் விதமாக தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

    தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற உள்ள இந்தப் போட்டிகள் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆக. 21-ல் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், ஆக. 23-ல் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கும் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியில் இருந்தும், ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் தலைமை ஆசிரியர், முதல்வர் பரிந்துரையுடன் மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ. 10,000, 2-வது பரிசு ரூ. 7,000, கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10,000 2-வது பரிசு ரூ. 7,000மும் வழங்கப்படும்.

    முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

    அவர்களுக்கு பயணப்படியுடன் ஒவ்வொரு போட்டிக்கும் முதல் பரிசு ரூ. 15,000, 2- வது பரிசு ரூ. 12,000, 3-வது பரிசு ரூ. 10,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai