Enable Javscript for better performance
மக்களவை தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம்மக்களவை தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மக்களவை தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம்மக்களவை தேர்தல் பணி ஆலோசனைக் கூட்டம்

    By அரியலூர்,  |   Published on : 14th August 2013 02:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அதிமுக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் மக்களவை தேர்தல் பணி குறித்த ஆலோசனைக் கூட்டம் அரியலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

    கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, பழைய உறுப்பினர்கள் பதிவை புதுப்பித்தல், மற்றும் மக்களவை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமைப்புச் சாரா ஓட்டுநர்கள் அணி மாநிலச் செயலர் ஆர். கமலக்கண்ணன் தலைமை வகித்தார்.

    மாவட்ட அமைப்புச் சாரா ஓட்டுநர் அணி தலைவர் வெங்கடேஷ் வரவேற்றார். அரியலூர் ஒன்றியச் செயலர் செல்வராசு முன்னிலை வகித்தார்.

    இதில் அரியலூர் மாவட்ட அதிமுக செயலர் கவிதா ராஜேந்திரன், எம்எல்ஏ துரை மணிவேல், மூன்னாள் மாவட்டச் செயலர் இளவழகன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட எம்ஜிஆர் மன்ற

    செயலர் தாமரை ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai