சுடச்சுட

    

    அரியலூர் அருகேயுள்ள திருமழபாடியில்  பெண்ணை காணவில்லை என திருமானூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம், திருமழபாடியைச் சேர்ந்தவர்  மைதீன்சாகிப் (63). அவரது மகள் ஜெய்லேகாபீவீ (32).  இவருக்கும், ஜமால்முகமது என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஜமால்முகமது தற்போது கத்தார் நாட்டில் பணிபுரிந்து வருகிறார்.

    இந்நிலையில், ஜெய்லேகாபீவீ கடந்த ஆக. 11-ல் அண்ணன் வீட்டுக்குச் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லையாம். இதுகுறித்து மைதீன்சாகிப் திருமானூர் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 13) புகார் கொடுத்தார்.

    இதுகுறித்து காவல் ஆய்வாளர் காமராஜ் வழக்குப் பதிந்து  விசாரணை நடத்தி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai