சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ கடனுதவி பெறகாலக்கெடு நீட்டிப்பு

  By அரியலூர்  |   Published on : 15th August 2013 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதாரத் திட்டங்களுக்கு இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெற ஆக. 20 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ்  வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர்கள் நிலம் வாங்குதல் (பெண்களுக்கானது), நிலம் மேம்படுத்துதல்(இருபாலருக்கும்), தொழில் முனைவோருக்கான திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 17 முதல் ஆக. 10 வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

   இந்தக் காலக்கெடு தற்போது ஆக. 20 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது.

  மேலும் விவரங்களுக்கு, ட்ற்ற்ல்/ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் க்ஹட்ற்ஸ்ரீர்.ஸ்ரீர்ம் என்ற  இணையதள முகவரிக்கு  சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்ய  வேண்டும். மேலும், தாட்கோ மாவட்ட மேலாளர்  அலுவலகம் மூலமும் பதிவு செய்ய வசதி  ஏற்படுத்தப்பட்டுள்ளது. பதிவு செய்யும் போது குடும்ப அட்டை எண் அல்லது இருப்பிடச் சான்று, ஜாதிச்  சான்று, வருமானச் சான்று ஆகியவற்றின் எண்,  வழங்கப்பட்ட தேதி, விண்ணப்பிக்க விரும்பும்  திட்டம் மற்றும் திட்ட அறிக்கை சம்பந்தமான  பதிவுகளை அதற்கான இடங்களில் அவசியம் பதிவு  செய்ய வேண்டும். புகைப்படத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai