சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் ஆக. 17 மற்றும் 24 ஆகிய நாள்களில் நடைபெற உள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  அரியலூர் மாவட்டத்தில் ஏழை, எளிய  மாணவர்களின் உயர்கல்விக்காக ஒற்றை சாளர முறையில் கல்விக் கடன் வழங்கும் முகாம் ஏற்கெனவே நடைபெற்றது. அதில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கல்விக் கடன் கிடைக்கப் பெறாத மாணவ, மாணவிகள் மீண்டும் உரிய ஆவணங்களான தாங்கள் பயிலும் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட கல்லூரிக் கட்டணப் பட்டியல் மற்றும் இதர ஆவணங்களுடன் கீழ்க்கண்ட நாள்களில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு வங்கியாளரை அணுகினால் கல்விக் கடன் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

  ஜயங்கொண்டம், தா. பழூர், ஆண்டிமடம்  ஊராட்சி ஒன்றியப் பகுதிகளைச்  சேர்ந்தவர்களுக்கு ஆக. 17-ல் ஜயங்கொண்டம்  அரசு மேல்நிலைப்

  பள்ளியிலும், அரியலூர், செந்துறை, திருமானூர் ஊராட்சி ஒன்றியப்  பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு ஆக. 24-ல் அரியலூர் வட்டாட்சியர்  அலுவலகத்திலும் முகாம் நடைபெறுகிறது  என்று அவர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai