சுடச்சுட

    

    "கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்'

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 15th August 2013 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுறவு வங்கிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

    ஜயங்கொண்டம் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிச் செயலர்களுக்கான  திருட்டு தடுப்பு விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த முகாமில் அவர் மேலும் பேசியது:

    கூட்டுறவு வங்கிகளில் நடைபெறும் திருட்டை தவிர்க்க, அனைத்து வங்கிகளிலும் கண்காணிப்பு  கேமராக்கள் மற்றும் அலாரங்களைப் பொருத்த வேண்டும். கூட்டுறவு வங்கி சாவிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். அனைத்து வங்கிகளிலும் பட்டா புத்தகங்கள் காவல் துறை மூலம் வைக்கப்படும். அவற்றை மழையில் நனையாதவாறும், இரவு நேரத்தில் ரோந்து வரும் காவலர்கள் கையெழுத்திட வசதியாகவும் வங்களின் முன்னால் வைக்க வேண்டும். மேலும், பெரும்பாலான தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் இரவு காவலர்கள் இல்லை. எனவே, உடனடியாக இரவு காவலர்களை நியமிக்க வேண்டும் என்றார் கோடீஸ்வரன். மேலும், முகாமில் குறைகளை கேட்டறிந்தார்.

    இந்த முகாமில் ஜயங்கொண்டம், ஆண்டிமடம்,  மீன்சுருட்டி, உடையார்பாளையம், விக்கிரமங்கலம், தா. பழூர், இரும்புலிக்குறிச்சி பகுதிகளில் உள்ள கூட்டுறவு வங்கி செயலர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் கல்யாணசுந்தரம், குணசேகரன், இளங்கோவன், தனஞ்செயன், அன்பழகன், அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai