சுடச்சுட

  

  சாத்தமங்கலத்தில் மனுநீதி நாள் முகாம்:ரூ. 6.53 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

  By அரியலூர்,  |   Published on : 15th August 2013 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், சாத்தமங்கலம்  ஊராட்சியில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது.

  முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தலைமை வகித்து ரூ. 6.53 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியது:

  தமிழக் முதல்வரின் உத்தரவுப்படி மாதந்தோறும்  மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தை தேர்வு  செய்து பொதுமக்களின் குறைகளை மனுக்களாகப்  பெற்று நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சிறப்பு மனு நீதி நாள் முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் அரசுத் துறை அலுவலர்கள் மக்களைத்  தேடிச் சென்று குறைகளை மனுக்களாகப் பெற்று  உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

  இங்கு நடைபெற்ற முகாமில் 113 மனுக்கள் பெறப்பட்டு வருவாய்த் துறையின் சார்பில் 58 மனுக்களும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில்  45 மனுக்களும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 மனுவும்  வட்ட வழங்கல் துறையின் சார்பில் ஒரு மனுவும், நில அளவைத்துறையின் சார்பில் 5 மனுக்களும் மாவட்ட பிற்பட்டோர் வநலத்துறையின் சார்பில் 3 மனுக்களும் பெறப்பட்டு தகுதியுடைய 88 பேர்களுக்கு உரிய ஆணைகளும் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மனுக்களும் கவனமாக பரிசீலிக்கப்பட்டு விரைவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

  தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறார். தமிழகத்தை கல்வியறிவு பெற்ற மாநிலமாக மாற்ற கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளார். எனவே,  பொதுமக்கள் ஆண் - பெண் இருபாலர் குழந்தைகளை 5 வயது முதல் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.

  அரியலூர் மாவட்டம் கல்வியில் பின்தங்கியுள்ளதால் அனைவரும் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து அரியலூரை கல்வியில் முதன்மை மாவட்டமாக மாற்ற

  உழைக்க வேண்டும். அரசு வழங்கும் திட்டங்களை  பொதுமக்களுக்கு கொண்டு சேர்க்க அனைத்து மட்டங்களிலும் உள்ள அலுவலர்களும் பாடுபட வேண்டும் என்றார் ஆட்சியர்.

  இம்முகாமில் வேளாண்மைத் துறை,  தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், சுகாதாரத்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை ஆகியவற்றின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

  கால்நடைத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் 10 சிறந்த கிடேரி பசு கன்றுகளுக்கான  பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இம்முகாமில் 2880 கால்நடைகளுக்கு சிகிச்சை,  குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், தடுப்பூசி,  செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை  என பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 314 விவசாயிகள் பயனடைந்தனர்.

  முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, தனித்துணை ஆட்சியர் ஜீனத்பானு,வேளாண்மை இணை இயக்குநர் குணசேகரன், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சுப்பையா, மாவட்ட சமுக நல அலுவலர் பூங்குழலி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, வருவாய்க் கோட்டாட்சியர் கணபதி வரவேற்றார். நிறைவில் வட்டாட்சியர் முருகன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai