Enable Javscript for better performance
சாலை விபத்தில்காயமடைந்தபெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே நேரிட்ட சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், நெரிஞ்சிக்கோரை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர்  சந்திரசேகரன். அவரது மனைவி சரோஜா (55), மகன் திருநாவுக்கரசு (36).

    இந்நிலையில், திங்கள்கிழமை சரோஜா தனது மகள் செந்தமிழ்ச்செல்வி வீட்டுக்குச் செல்வதற்காக விளாங்குடி சென்றாராம். பேருந்திலிருந்து இறங்கி நடந்து சென்றபோது,  அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டுச் சென்றது. இதில் பலத்த காயமடைந்த சரோஜா அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,  பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். எனினும் அங்கு அவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

    திருநாவுக்கரசு அளித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் கணேஷ்குமார் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai