சுடச்சுட

  

  சுதந்திர தினவிழா:201 ஊராட்சிகளில் இன்றுகிராமசபை கூட்டம்

  By அரியலூர்  |   Published on : 15th August 2013 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூர் மாவட்டத்தில் 210 ஊராட்சிகளிலும் வியாழக்கிழமை (ஆக. 15) கிராமசபை கூட்டம் நடைபெற உள்ளது.

  இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் சோலார் விளக்குகளை பராமரித்தல் குறித்து பயனாளிகளுக்கு விவரம் தெரிவித்தல், பசுமை வீடுகளுக்கான அலகுத் தொகையை ரூ. 1.80 லட்சத்தில் இருந்து ரூ. 2.10 லட்சமாக உயர்த்துதல், இந்திரா நினைவு குடியிருப்புத் திட்ட வீடுகளுக்கான அலகுத் தொகையை ரூ. 1 லட்சத்தில் இருந்து ரூ. 1.20 லட்சமாக உயர்த்துதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம், உருவாக்கப்பட்ட மனித சக்தி நாள்கள், மேற்கொள்ளப்பட்ட செலவினம் ஆகியவற்றை கிராமசபையின் முன்வைத்து ஒப்புதல் பெறுதல், கிராம ஊராட்சிகளில் குடிநீர் வசதி, மின்சார வசதி, பொது சுகாதாரம் மற்றும் இதர நிர்வாகச் செலவுகள் உளளிட்ட பல்வேறு பொருள்கள் குறித்தும், ஊராட்சித் தலைவர்களால் கொண்டுவரப்படும் இதரப் பொருள்கள் குறித்தும் விவாதிக்கப்பட உளளது.

  எனவே, அந்தந்தப் பகுதிகளில் உள்ள மக்களவை உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழுத் தலைவர்கள், உறுப்பினர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai