சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மர்மமான முறையில் பெண் ஒருவர் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  ஜயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம்  கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் மனைவி லட்சுமி (36). இவருக்கு கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இரண்டு மகள், ஒரு மகன் உள்ளனர்.

  அறிவழகனுக்கும், லட்சுமிக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், புதன்கிழமை காலை வீட்டில் லட்சுமி தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தார்.

  தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் உதவி ஆய்வாளர் ரபீக்உசேன் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

   மேலும்,  லட்சுமி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai