Enable Javscript for better performance
வாகனத் தணிக்கையில்104 வழக்குகள் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட வாகனத் தணிக்கையில் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பாக 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  ஜியாவுல்ஹக் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள 16 காவல் நிலைய போலீஸாரும், நெடுஞ்சாலை  ரோந்துப் போலீஸாரும் செவ்வாய்க்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    இதில் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 6 வழக்குகளும், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் இயக்கியதாக 29 வழக்குகளும், இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்ததாக 16 வழக்குகளும், அதிக வேகத்தில் வாகனம் இயக்கியதாக 9 வழக்குகளும் உள்ளிட்ட 104 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தபட்டவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

    போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது  கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai