சுடச்சுட

  

  அரியலூரில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தேசியக் கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

  அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற 67-வது சுதந்திர தின விழா விழாவில் மாவட்ட ஆட்சியர் எ.சரவணவேல்ராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல் துறை, தீயணைப்புத் துறை, ஊர்க் காவல்படை, சாரண - சாரணியர், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், தேசிய மாணவர் படை ஆகியோரது அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

  பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு வழங்கி கவுரவித்தார். மேலும் வருவாய்த்துறை, வளர்ச்சித் துறை, சுகாதாரத் துறை, செய்தி-மக்கள் தொடர்புத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 49 ஊழியர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

  முன்னாள படை வீரர் நல அலுவலகம் சார்பில் ஒருவருக்கும், புதுவாழ்வு திட்டம் சார்பில் 20 பேருக்கும், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் சார்பில் 10 மாணவ, மாணவிகளுக்கும், சமுக நல அலுவலகம் சார்பில் 87 பேருக்கும், மகளிர் திட்ட அலுவலகம் சார்பில் 18 குழுக்களுக்கும் என  பல்வேறு துறைகளின் சார்பில் 328 பேருக்கு ரூ. 1 கோடியே 74 லட்சத்து 6 ஆயிரத்து 680 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர்  வழங்கினார்.

  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் கலைநிகழச்சிகள் நடைபெற்றன.

  விழாவில் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக், மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, முதன்மை கல்வி அலுவலர் மதிவாணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் செல்வகுமார், காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்கள் தொல்காப்பியன், செல்லமுத்து, நாகராஜன்,  இளங்கோவன், கோட்டாட்சியர்கள் கணபதி, கஸ்தூரி, வட்டாட்சியர்கள் முருகன், குணசேகரன், ராம்சுந்தர் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai