சுடச்சுட

    

    சுதந்திர தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல் ராஜ் பங்கேற்றார்.

    கூட்டத்தில் தாமரைக்குளம் கிராமத்தில் முதல்வரின் சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட சோலார் விளக்குகளைப் பராமரித்தல் குறித்து பயனாளிகளுக்கு விவரம் தெரிவிக்கப்பட்டது.

    பசுமை வீடுகளுக்கான அலகுத் தொகையை ரூ. 1.80 லட்சத்திலிருந்து ரூ. 2.10 லட்சமாக உயர்த்துதல், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டத்துக்கான அலகுத் தொகையை ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 1.20 லட்சமாக உயர்த்தியது தொடர்பாக பயனாளிகளிடம் விவாதிக்கப்பட்டது.

    வேலை உறுதித் திட்டத்தில் நடைபெறும் பணிகளின் முன்னேற்றம், அதற்கான செலவினம் குறித்து ஒப்புதல் பெறப்பட்டது. தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் தொடர்பான அடிப்படை தகவல் அறிக்கையும் கூட்டத்தில் வைக்கப்பட்டது.

    கூட்டத்தில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமகிருஷ்ணன், வருவாய்க் கோட்டாட்சியர் கணபதி,மாவட்ட வழங்கல் அலுவலர் மோகன்,ஊராட்சித் தலைவர் சுந்தரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai