சுடச்சுட

  

  அரியலூர் பகுதிகளில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

  அரியலூர் நகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை நகராட்சித் தலைவர் முருகேசன் ஏற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு,ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

  நகராட்சி ஆணையர் (பொ) இளஞ்செழியன், துணைத் தலைவர் மலர்க்கொடி மனோகரன், உறுப்பினர்கள் மாலா தமிழரசன், ராஜேந்திரன், குணா, ராமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  அரியலூர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சார்பு நீதிபதி முத்துகுமாரசாமி கொடியேற்றினார்.

  நிகழ்ச்சியில் குற்றவியல் நீதிபதி பாலகிருஷ்ணன், வழக்குரைஞர்கள் மனோகரன்,பகுத்தறிவாளன்,செல்வமணி,சுந்தரபாரதி, வீரவிஜயன்,லெஸ்சி,குமார சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  அரியலூர் நகர காங்கிரஸ், காங்கிரஸ் தொழிற்சங்கங்கள் சார்பில் நகரசபை முன்னாள் உறுப்பினர் பழனிசாமி தலைமையில் தொழிற்சங்கத் தலைவர் சிவக்குமார் கொடியேற்றினார்.

  அரியலூர் பேருந்து நிலைய வாசலில் மாவட்ட மருத்துவ அணித் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான நல்லமுத்து கொடியேற்றினார். துரைசாமி,பழனிசாமி,பாலசுப்பிரமணியன்,பிரஸ் செந்தில்,ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai