சுடச்சுட

    

    அரியலூர் அருகே பெண் ஒருவர் கடத்தப்பட்டதாக,  அவரது தந்தை போலீஸில் புகார் தெரிவித்தார்.

    அரியலூர் மாவட்டம், இரும்புலிக்குறிச்சியை அடுத்த பிலாக்குறிச்சி காலனி தெருவைச்  சேர்ந்தவர் இளங்கோவன் (45). விவசாயி. இவரது மகள் இளந்தமிழ் (19).

    கடந்த 14 -ம் தேதி இளந்தமிழ் வீட்டில் இருந்தபோது, அவரை அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் கடத்திச் சென்றதாக, இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் ஆக. 15-ம் தேதி இரவு இளங்கோவன் புகார் தெரிவித்தார்.

    இதுகுறித்து காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கருப்பையா வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai