சுடச்சுட

  

  அரியலூர் கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா

  By அரியலூர்,  |   Published on : 17th August 2013 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூரில் உள்ள கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

  அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில்  நடைபெற்ற விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை வை. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியர் சங்கத் தலைவர் வை. பாலகிருஷ்ணன், கிராமக் கல்விக்குழுத் தலைவர் மாலாதமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  அரியலூர் நகர்மன்றத் தலைவர் முருகேசன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கணித ஆசிரியை பிரபாவதி வரவேற்றார். தமிழாசிரியை ம. இசையமுது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

  சுதந்திர தின விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியை இ. மேரிஜயராணி நன்றி கூறினார். அரியலூர் அருகேயுள்ள லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவுக்கு சத்யசாயி சமிதி தலைவி வசந்தா கணேசன் தலைமை வகித்தார். கல்வி நிலையச் செயலர் புகழேந்தி வரவேற்றார். வள்ளலார் கல்வி நிலையத் தலைவர் பாலகிருஷ்ணன், கயர்லாபாத் ஊராட்சி மன்றத்  தலைவர் மகாலட்சுமி அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேவாரத்னா காமராஜ் தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். குமாரசாமி பழமலை வீரராகவன்பிள்ளை அறக்கட்டளை அறங்காவலர் தேன்மொழி கட்டட வளர்ச்சி நிதியாக ரூ. 10 ஆயிரம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வழக்குரைஞர்கள் செல்வராசு, சுப்பிரமணியன், குணசேகரன், செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  தலைமை ஆசிரியர் செüந்தரராஜன் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai