சுடச்சுட

  

  அரியலூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள வாரச் சந்தையை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெள்ளிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  அரியலூர் நகரில் பேருந்து நிலையம் அருகில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.

  சாலையோரக் கடைகள் மூலம் செயல்பட்டு வரும் இந்தச் சந்தை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால், இந்த வாரச் சந்தையை அகற்றி நகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.

  மேலும், சந்தை நடைபெறும் இடங்களை சுத்தமாகவும்,  சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வதற்கு சந்தையில்  ஆங்காங்கே குப்பைத்தொட்டிகள் அமைக்கவும், நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

  மழைக்காலங்களில் வாரச் சந்தை நடைபெறும் இடங்களில் மழைநீர் தேங்கி நிற்காமல் இருக்கும் வகையில்  தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

  தற்போது இயங்கி வரும் வாரச் சந்தைக்கு இடம்  போதவில்லையெனில், அதற்கு மாற்றாக வேறொரு  இடத்தைத் தேர்வு செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்கள்  தெரிவித்தால், அரசுக்கு கருத்துரு அனுப்பி ஒப்புதல் பெறப்படும்.

  மேலும், பழுதடைந்துள்ள கடைகளை தாற்காலிகமாக சீர் செய்ய நகராட்சி நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

  ஆய்வின்போது, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) இளஞ்செழியன், வட்டாட்சியர் முருகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai