சுடச்சுட

    

    அரியலூர் அருகே இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இளைஞர் ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம், தளவாய் அருகேயுள்ள குறிச்சிக்குளம் மேலத்தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் பாக்கியராஜ் (28). இவர் புதன்கிழமை இரவு தளவாய் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாராம்.

    அப்போது, எதிரே புதுக்கோட்டை மாவட்டம், தாளம்பாபூரைச் சேர்ந்த லாரன்ஸ் (34) ஓட்டி வந்த இரு சக்கர வாகனம், பாக்கியராஜ் வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாக்கியராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து வியாழக்கிழமை ராமகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், குவாகம் காவல் நிலைய ஆய்வாளர் அப்துல்ரகுமான் வழக்குப் பதிந்து, லாரன்ûஸ கைது செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai