சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில், தமிழக அரசின் சிறப்பு திட்டங்களில் ஒன்றான  சதுரங்க விளையாட்டை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

  பள்ளித் தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை வகித்து,

  பேரணியை தொடக்கிவைத்தார்.

  பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் சதுரங்கப்  போட்டியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும்  வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.

  பேரணி பள்ளியில் தொடங்கி அண்ணாசிலை,  கடைவீதி, நான்குசாலை, தா. பழூர் சாலை,  பேருந்து நிலைய சாலை வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

  இதில் ஆசிரியர்கள் ராஜப்ரியன், பரமசிவம், முனுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  உடற்கல்வி ஆசிரியர் கண்ணதாசன் நன்றி கூறினார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai