Enable Javscript for better performance
\\\"சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், உரம் கையிருப்பு\\\'- Dinamani

சுடச்சுட

    

    "சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல், உரம் கையிருப்பு'

    By அரியலூர்  |   Published on : 17th August 2013 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைநெல்,   உரங்கள் போதுமான அளவில் கையிருப்பு உள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எ.  சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

    அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:

    தோட்டக்கலைத்துறையின் மூலம் ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ், அரியலூர் மாவட்டத்துக்கு ரூ. 32 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பொதுப் பிரிவினருக்கு ரூ. 25.60 லட்சம், தாழ்த்தப்பட்டோருக்கு ரூ. 6.40 லட்சம் மதிப்பீட்டில் வீரிய ரக காய்கறி விதைகள், பழ மரச்செடிகள் வழங்கப்பட உள்ளது.

    இத்திட்டத்தில ஒரு விவசாயிக்கு அதிகப்படியாக காய்கறி விதைகள் 0.50 ஹெக்டேர்  மற்றும் பழ மரச்செடிகள் 1 ஹெக்டேர்  வரையிலும் 50 சதவீத மானியத்தில்  வழங்கப்படுகிறது.

    தற்போது, கே 2 மிளகாய் மற்றும் பிகேஎம்  1 தக்காளி ஆகிய காய்கறி விதைகள் அனைத்து வட்டாரங்களிலும் இருப்பு  வைக்கப்பட்டு, ஆடிப் பட்டத்துக்கு 

    விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    துல்லியப் பண்ணைத் திட்டத்தின் கீழ் காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்கும்  பொருட்டு, அரியலூர் மாவட்டத்துக்கு 50 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பந்தல் காய்கறி சாகுபடி செய்ய அரியலூர் மாவட்டத்துக்கு 5 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதம் வரை 82.31 மி.மீ. மழை பெய்துள்ளது. நடப்பு சம்பா பருவத்தில் ஆடுதுறை 39, ஆடுதுறை 45 கோ 43, மற்றும் சாவித்திரி ஆகிய விதைகள் இதுவரை 135 டன் விநியோகம்  செய்யப்பட்டுள்ளன.

    மேலும், விவசாயிகளுக்கு வழங்க 150 டன் நெல் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. யூரியா உரம் 742 மெ.டன், டிஏபி 507 மெ.டன், பொட்டாஷ் 432 மெ.டன் மற்றும் கலப்பு  உரங்கள் 470 மெ.டன் தேவையான அளவு தொடக்க வேளாண்மை விற்பனை  மையங்களில் இருப்பு உள்ளது. குறுவை சாகுபடி இதுவரை 1722 ஹெக்டேரில்  நடைபெற்றுள்ளது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்  அ. கருப்பசாமி, திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) சாமுவேல் இன்பதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai