Enable Javscript for better performance
பால்குடம், அலகு குத்தி பக்தர்கள் வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஆடி கடைசி வெள்ளியையொட்டி,  அரியலூரில் பால்குடம், வேல் அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாகச் சென்று அம்மன் சுவாமியை வழிபட்டனர்.

    அரியலூர் மேளக்காரத்தெரு மற்றும் மருத்துவமனை சாலையில் உள்ள காளியம்மன் பக்தர்களும், சிங்காரத்தெரு மாரியம்மன் பக்தர்களும், அரியலூர் பேருந்து நிலையம் அருகே செட்டி ஏரிக் கரையில் கூடினர். அங்குள்ள விநாயகர் கோவிலில் இருந்து அவர்கள் பால்குடம், வேல் அலகு, பறவைக் காவடி எடுத்து வந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்த ஊர்வலமாகப் புறப்பட்டனர்.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, அந்தந்த கோவிலை அடைந்தது. பின்னர், அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகளும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai