சுடச்சுட

  

  அரியலூரில் வீட்டுக்கு மின் இணைப்பு  கொடுத்தபோது, மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் ஒருவர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

  அரியலூர் மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த ராமசாமி மகன்  சரவணன் (30). எலக்ட்ரீசியன். இவர் வியாழக்கிழமை  இரவு அரியலூரைச் சேர்ந்த செந்தில்குமார் வீட்டில் மின் இணைப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இதுகுறித்து ராமசாமி அளித்த புகாரின்பேரில், கயர்லாபாத் காவல் நிலைய ஆய்வாளர் ரெங்கசாமி வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai