Enable Javscript for better performance
வெவ்வேறு விபத்துகளில் இருவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் வியாழக்கிழமை நேரிட்ட வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவர் காயமடைந்தனர்.

    அரியலூர் புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிவேல் (44). தொழிலாளி. இவர் தனது மொபட்டில் வியாழக்கிழமை நெரிஞ்சிக்கோரை அருகே சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திருச்சி மாவட்டம், சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த மனோகர் ஓட்டி வந்த கார் மணிவேல் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து அரியலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் வழக்குப் பதிந்து, தலைமறைவான கார் ஓட்டுநர் மனோகரை தேடி வருகிறார்.

    மற்றொரு விபத்து:

    அரியலூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஸ்ரீதேவி (35). இவர் தனது மொபட்டில் அரியலூர் ராவுத்தனபட்டி பிரிவு சாலை அருகே வியாழக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாராம். அப்போது, திண்டுக்கல் மாவட்டம், காமராஜபுரம் ராமு (24), ஓட்டி வந்த வேன் ஸ்ரீதேவி  மீது மோதியது.  இதில் பலத்த  காயமடைந்த அவர் அரியலூர் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அரியலூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பார்த்திபன் வழக்குப் பதிந்து ராமுவை கைது செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai