சுடச்சுட

    

    ஆசிரியர் தகுதித் தேர்வு அரியலூர் மாவட்டத்தில் 3335 பேர் எழுதினர்ஆசிரியர் தகுதித் தேர்வு

    By அரியலூர்  |   Published on : 18th August 2013 03:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 3335 பேர் எழுதினர்.

    தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தாள் -1 சனிக்கிழமை நடைபெற்றது.

    அரியலூர் கல்வி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மாண்ட்போர்டு மேல்நிலைப் பள்ளி, அரசு நகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி என 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.மேலும், உடையார்பாளையம் கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் தேர்வு எழுத 3397 பேர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வாங்கியிருந்தனர். ஆனால்,  சனிக்கிழமை நடைபெற்ற தேர்வில் 62 பேர் கலந்து கொள்ளவில்லை.

    ஞாயிற்றுக்கிழமை (ஆக. 18) நடைபெற உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை 7152 பேர் எழுதுகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai