Enable Javscript for better performance
இரு சக்கர வாகனங்கள் மோதல்: 2 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.

    அரியலூரை அடுத்த அயன்சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (40). 

    இவர் தனது நண்பர் பெரியசாமியுடன் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை அரியலூர் - திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்தார்.

    மலத்தான்குளம் பிரிவு பாதை அருகே சென்றபோது எதிரே தா. பழூரைச் சேர்ந்த அன்புமோகன் (30), ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியது.

    இதில் கருப்பையா, பெரியசாமி இருவரும் பலத்த காயமடைந்து அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதுகுறித்து கீழப்பழூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்

    சாகுல் அமீது வழக்குப்

    பதிந்து  அன்புமோகனை கைது செய்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai