சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே  திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

    அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்து மகள் ருக்மணி (21). இவர் பட்டப் படிப்பு முடித்து வீட்டில் இருந்தார். இவருக்கும், செந்துறையைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டனுக்கும் (24) திருச்சியில் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், ருக்மணிக்கு வேறொரு இடத்தில் ஆக. 26-ம் தேதி திருமணம் செய்துவைக்க முத்து முடிவு செய்திருந்தாராம். அதற்கு, ருக்மணி, மணிகண்டனை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துவைக்கும்படியும் தனது பெற்றோரிடம் தெரிவித்தாராம். இதையடுத்து, முத்து மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 6-ம் தேதி மணிகண்டனை அழைத்துப் பேசினராம். அவரும், ருக்மணியை திருமணம் செய்துகொள்ள சம்மதித்தாராம்.இதனிடையை, ஆக. 7-ம் தேதி முதல் மணிகண்டன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த ருக்மணி வெள்ளிக்கிழமை உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதையடுத்து, பலத்த காயங்களுடன் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்,

    அங்கு இரவு உயிரிழந்தார். இதுகுறித்து செந்துறை காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரபு வழக்குப் பதிந்து, மணிகண்டனை தேடி வருகிறார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai