சுடச்சுட

  

  ரயில் நிலையங்களில் பெண்களிடம் நகை திருடிய இளைஞர் கைது

  By அரியலூர்  |   Published on : 18th August 2013 04:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலம், விழுப்புரம் ரயில் நிலையங்களில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவரை போலீர் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  விழுப்புரம் மாவட்டம், புதுக்குப்பம், ஜே.ஜே நகரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் மனைவி ஜோதி (48).

  இவர் ஜூலை 25 ஆம் தேதி விருத்தாசலம் ரயில் நிலையத்தில் நடந்து சென்றபோது, மர்ம நபர் ஒருவர் அவர் அணிந்திருந்த முக்கால் பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடினாராம்.

  அப்போது, அந்த மர்ம நபர் வைத்திருந்த செல்போன் கீழே விழுந்தது. அதை ஜோதி எடுத்து ரயில்வே காவலர்களிடம் ஒப்படைத்தார்.

  இதுகுறித்து ரயில்வே போலீர் விசாரணை மேற்கொண்டதில், அந்த செல்போன் அரியலூர் அண்ணாநகர் பகுதியிலுள்ள எருத்துக்காரன்பட்டியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் முத்துவுடையது (31) எனத்  தெரியவந்தது. மேலும், அவர் தலைமறைவானதும்  தெரிந்தது.

  இந்நிலையில் திருச்சி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம் ரயில் நிலையங்களில் அதிக அளவு தங்கச் சங்கிலி பறிப்பு நடைபெற்று வந்தது. இதைத் தடுக்க திருச்சி ரயில்வே

  காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜவேல் மேற்பார்வையில், விழுப்புரம் ரயில்வே காவல் ஆய்வாளர் செந்தில்குமார், அரியலூர் ரயில்வே காவல் துணை

  ஆய்வாளர்கள் சுப்பிரமணி, சுந்தரமூர்த்தி, தலைமைக் காவலர் சுகுமாரன் மற்றும் காவலர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

  தனிப்படையினரின் தீவிர விசாரணையில் முத்து, உளுந்தூர் பேட்டையில் ஒரு தோட்டத்தில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

  இதையடுத்து, போலீர் முத்துவை வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  விசாரணையில், அவர் விழுப்புரம் ரயில் நிலையத்தில்  சென்னை போரூர் அருகேயுள்ள மவுலிப்பாக்கத்தைச் சேர்ந்த பத்மாவதி என்பவரிடம் 1 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றதும் தெரிய வந்தது.

  கைது செய்யப்பட்ட முத்துவிடமிருந்து தங்கச் சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai