Enable Javscript for better performance
சுதந்திர நாளில் பணி : 21 நிறுவனங்கள் மீது வழக்கு - Dinamani

சுடச்சுட

    

    சுதந்திர நாளில் பணி : 21 நிறுவனங்கள் மீது வழக்கு

    By அரியலூர்  |   Published on : 19th August 2013 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு சுதந்திர தின விடுமுறை அளிக்காத 21 நிறுவனங்கள், கடைகள் மீது தொழிலாளர் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.

    தொழிலாளர் நலச் சட்டத்தின்படி கடைகள், திரையரங்குகள், மருத்துவமனைகள், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வார விடுமுறை கண்டிப்பாக அளிக்க வேண்டும்,

    மேலும் அந்தந்த நிறுவனம் விரும்பும் 5 பண்டிகை விடுமுறைகளும், குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய 4 தேசிய விடுமுறைகளையும் ஊழியர்களுக்கு அளிக்க வேண்டும். 

    விடுமுறை அளிக்காமல் வேலைக்கு அமர்த்தினால் அன்று அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது சம்பளத்துடன் வேறொரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும்.

    சுதந்திர தினத்தில் இந்த விதிகளை நிறுவனங்கள் கடைப்பிடிக்கின்றனவா என்று அரியலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் த. சேதுமாதவன் அரியலூர், ஜயங்கொண்டம் பகுதிகளில் 41 நிறுவனங்களில் ஆய்வு நடத்தினார்.

    அப்போது 21 நிறுவனங்கள் விதியை மீறியது தெரிய வந்தது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதியப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    14 வயது நிறைவடையாதோரை வேலைக்கு எந்த இடத்திலும் ஈடுபடுத்தக் கூடாது, மீறினால் ஓராண்டு சிறைத் தண்டனை, ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என சேது மாதவன் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai