சுடச்சுட

  

  திருமானூர் ஒன்றியக் கூட்டம்:அதிமுக, திமுக வெளிநடப்பு

  By அரியலூர்  |   Published on : 19th August 2013 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், திருமானூரில் தலைவர் சீனிவாசன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை வலியுறுத்தி அதிமுக, திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

  கூட்டத்தில் நடைபெற்ற விவாதம்:

  சக்திவேல் (திமுக): திருமானூர் ஒன்றியத்தில் பல தனியார் பள்ளிகள் இருக்கும்போது கீழப்பழூவூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மட்டும் கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் கூறி, அதன் மீது நடவடிக்கை எடுக்க மன்ற ஒப்புதல் கோரி தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது ஏன்? இதையும், திமுக உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுவதைக் கண்டித்தும் வெளிநடப்பு செய்கிறோம் எனக் கூறி வெளிநடப்பு செய்தார். அவரைத் தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் பழனிமுத்து, மருதமுத்து, ரேவதி,எழிலரசி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.

   தலைவர் சீனிவாசன் (அதிமுக): சம்பந்தப்பட்ட பள்ளி மீது எனக்குத் தனிப்பட்ட வெறுப்பு கிடையாது. கடந்த ஒன்றியக் கூட்டத்தில் உறுப்பினர் சரவணன் அந்தப் பள்ளியில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்  நடவடிக்கை  கோரி தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதால், ஏழை மாணவர்களின் நலன் கருதி அந்தத் தீர்மானம் வைக்கப்பட்டுள்ளது.

  துணைத் தலைவர் குமரவேல் (அதிமுக): இந்தத் தீர்மானத்தை நீங்கள் தன்னிச்சையாக கொண்டு வந்தது போலத் தெரிகிறது. இந்தத் தீர்மானத்தைக் கண்டித்து நானும் வெளிநடப்பு செய்கிறேன் எனக் கூறி  வெளியேறினார். அவருடன் அதிமுக உறுப்பினர்கள் சிலரும் வெளியேறினர். பின்னர் கூட்டம் தொடர்ந்தது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai