Enable Javscript for better performance
முன்விரோதம் : ஊராட்சித் தலைவரைத் தாக்கியவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    முன்விரோதம் : ஊராட்சித் தலைவரைத் தாக்கியவர் கைது

    By அரியலூர்,  |   Published on : 19th August 2013 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே தேளூர் ஊராட்சித் தலைவரைத் தாக்கியவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    அரியலூர் அருகேயுள்ள தேளூர் ஊராட்சித் தலைவராக இருப்பவர் கருணாநிதி (48). அதிமுகவைச் சேர்ந்த இவரது ஊராட்சி எல்லையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த அரசுக்குச் சொந்தமான நிலத்தை மீட்டு அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கருணாநிதி அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டாராம்.  இதைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து வி. கைகாட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் ஆக்கிரமித்து வைத்திருந்த 5 ஏக்கர் நிலத்தை மீட்டு தமிழக அரசின் வனத் துறையிடம் ஒப்படைத்தனர். 

    இதனால் முருகேசனுக்கும், ஊராட்சித் தலைவர் கருணாநிதிக்கும் இடையே விரோதம் ஏற்பட்டது.  இந்நிலையில் அண்மையில் கருணாநிதி வி. கைகாட்டி உப்போடை அருகே வந்தபோது முருகேசன், அவரது நண்பர்கள் சேர்ந்து அவரைத் தாக்கினராம். மேலும் முருகேசன் கத்தியால் கருணாநிதியைக் குத்த முயன்றாராம்.

    அவர்களிடமிருந்த தப்பிய கருணாநிதி கயர்லாபாத் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் பார்த்திபன் வழக்குப் பதிந்து முருகேசனை சனிக்கிழமை கைது செய்தார். மற்ற 2 இருவரைத் தேடுகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai