சுடச்சுட

    

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் ரூ. 6 லட்சத்து 79 ஆயிரத்து 947 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அரியலூர் வட்டத்திற்குட்பட்ட 75 பயனாளிகளுக்கு  உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 1,81,450 மதிப்பில் கல்வி உதவித் தொகை காசோலை, எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட 26 பேருக்கு உதவித் தொகை  ஆணை, 2 பேருக்கு விதவை உதவித் தொகை ஆணை, 5 பேருக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை ஆணை என 33 பேருக்கு ஆணைகளை வழங்கினார். மேலும், அரியலூர் மாவட்டம், உடையார்பாளயம் வட்டம், கோடாலிக்கருப்பூர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் மாதவன் அறிவியல் கண்காட்சியில் சிறப்பிடம் பெற்றதாற்காக சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ. 3 ஆயிரத்துக்கான காசோலை, மாவட்ட மாறறுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்றவருக்கு கருப்பு கண் கண்ணாடி, மடக்கு ஊன்றுகோல், மற்றும் பேசும் மின்னணுக் கடிகாரம் ஆகியவற்றையும் ஆட்சியர் வழங்கினார்.

    மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கினார். கூட்டத்தில் 421 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, வருவாய்க் கோட்டாட்சியர் கணபதி, மகளிர் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai