Enable Javscript for better performance
தொழிற்கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் கோரிக்கைகளை வலியுறுத்தி மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடப்பிரிவு தொடங்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்விக்கு தனி இயக்ககம் தொடங்க வேண்டும். 652 கணினி ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலப் பொதுச் செயலர் அ. நல்லப்பன் தலைமை வகித்துப் பேசினார்.

    மாவட்டச் செயலர் செங்குட்டுவன், மாவட்டத் தலைவர் கலையரசன் உள்ளிட்டோர் பேசினர்.

    பெரம்பலூர் மாவட்டச் செயலர் எம்.எஸ். ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai