Enable Javscript for better performance
மத்திய அரசைக் கண்டித்து சமக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் மத்திய அரசைக் கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர்  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கைவிட வேண்டும், உயர்ந்து வரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வுலியுறுத்தி அரியலூர் தலைமை அஞ்சல் நிலையம் முன்

    நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலர் ஜெ. கொ. சிவா தலைமை வகித்துப் பேசினார்.

    மாவட்ட இளைஞரணி செயலர் பாழ. சுதாகர், துணைச் செயலர் கண்ணதாசன்,

    ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன், பொருளாளர் ஆறு

    முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட அவைத் தலைவர் டி. கணேசன் வரவேற்றார். நகரச் செயலர் பிரபு நன்றி கூறினார்.

    கரூர்...

     கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டச் செயலர் தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்டத் துணைச் செயலர் கார்த்திக், கரூர் நகரத் துணைச் செயலர்  ஆனந்தராஜ், மாவட்ட இளைஞரணிச் செயலர் பாக்கியராஜ் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai