Enable Javscript for better performance
மாணவி கடத்தல்: உறவினர்கள் மறியல்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே கடத்தப்பட்ட பள்ளி மாணவியை மீட்டுத் தர கோரி உறவினர்கள் திங்கள்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜயங்கொண்டம் அருகேயுள்ள வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்தவரின் மகள் மீன்சுருட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இவர் திங்கள்கிழமை காலை பள்ளிக்குச் செல்ல பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்றபோது சுத்துகுளம் கிராமத்தைச் சேர்ந்த அன்பரசன் மகன் விவேக் உள்ளிட்டோர் காரில் வந்து மாணவியைக் கடத்திச் சென்றனராம்.

    இதுகுறித்து மீன்சுருட்டி காவல் நிலையத்தில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் வழக்குப் பதிந்து விவேக்கை தேடிவருகிறார்.

    இந்நிலையில் மாணவி கடத்தப்பட்டதைக் கண்டித்து திங்கள்கிழமை மாலை சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீஸார் அளித்த உறுதியை அடுத்து மறியலைக் கைவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai