Enable Javscript for better performance
விருது பெற சுயஉதவி குழு விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் விருது பெற விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழக ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் கடந்த 2012 ஏப்ரல் மாதம் தெரிவித்தபடி, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து ஊராட்சி ஒன்றியங்களின் ஊராட்சிகளில், 2012-13-ல் இயற்கை இடர்பாடு ஏற்பட்ட காலங்களில் தாங்கள் செய்த சாதனைகள், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுத்தது, ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவருக்கும் 100 சத கல்வியறிவு ஏற்படுத்திக் கொடுத்தது போன்ற நிகழ்வுகளை ஏற்படுத்திய சுய உதவிக்குழு, ஊராட்சி அளவிலான குழுக் கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு தமிழக அரசால் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

    என்வே தகுதியுள்ள சுய உதவிக்குழுவினர் தாங்கள் செய்த சாதனை தொடர்பாக அனைத்து ஆவணங்களுடன், ஆக. 30-க்குள் அரியலூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை 04329-22805 என்ற எண்ணில் தெரிந்து கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai