சுடச்சுட

    

    அரசு பொறியியல் கல்லூரியை  வெங்கடகிருஷ்ணாபுரத்துக்கு மாற்ற  மாவட்ட வளர்ச்சிக்குழு வலியுறுத்தல்

    By  அரியலூர்,  |   Published on : 21st August 2013 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அரசுப் பொறியியல் கல்லூரியை வெங்கடகிருஷ்ணாபுரத்துக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட வளர்ச்சிக் குழு வலியுறுத்தியுள்ளது.
     இது குறித்து அக்குழுவின் தலைவர் எஸ். பாலகிருஷ்ணன் முதல் அமைச்சர் ஜெயலலிதாவுக்கு செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:
     அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுக் கலைக் கல்லூரி வளாகத்தில் தொடங்கப்பட்ட அரசுப் பொறியியல் கல்லூரி தற்போது விளாங்குடியிலிருந்து, அம்பாபூர் செல்லும் சாலையில் உள்ள இடத்தில் தற்காலிக கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் காஞ்சிபுரம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இங்கு மாணவ- மாணவிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. கல்லூரிக்கு செல்ல சரியான போக்குவரத்து வசதியும் இல்லை.
     எனவே அந்தக் கல்லூரியை அரியலூர்-ஜயங்கொண்டம் சாலையில் வெங்கடகிருஷ்ணாபுரம் ஊராட்சிக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலத்தில் அமைத்தால் மாணவ, மாணவிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai