சுடச்சுட

  

  ஜயங்கொண்டம் அருகே  பெண்ணை  தாக்கியவர் கைது

  By  ஜயங்கொண்டம்  |   Published on : 21st August 2013 09:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பெண்ணை தாக்கியவரை தா.பழூர் போலீசார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
   ஜயங்கொண்டம் அருகே உள்ள தேவமங்கலம் வடக்குத் தெருவை சேர்ந்த முத்துகுமரன் மனைவி பரமேஸ்வரி(40). இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த உறவினர் கோவிந்தராசு மகன் மதியழகன்(53) என்பவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
   இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் பரமேஸ்வரி நிலத்தை உழுவதற்காக டிராக்டரை அழைத்து பிரச்சினைக்குரிய நிலத்திற்கு சென்றார். அப்போது அங்கு வந்த மதியழகன் டிராக்டரை மறித்து தகராறு செய்து பரமேஸ்வரியை திட்டி தாக்கினாராம்.
   இதுகுறித்து அவர் தா.பழூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜராஜேஸ்வரி வழக்குப்பதிந்து மதியழகனை கைது செய்து விசாரிக்கின்றார்.
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai