சுடச்சுட

    

    பெரம்பலூர், அரியலூரில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு

    By  பெரம்பலூர்/அரியலூர்  |   Published on : 21st August 2013 09:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது தலைமையில் அரசு அலுவலர்கள் மத நல்லிணக்க உறுதிமொழியை செவ்வாய்க்கிழமை ஏற்றனர்.
     இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ஏ. சுப்பிரமணியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அய்யம்பெருமாள், தனித்துணை ஆட்சியர் (சிறப்பு திட்ட அமலாக்கம்) இரா. ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சூரியமூர்த்தி உள்ளிட்ட அனைத்து அரசுத்துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.
     அரியலூர்:அரியலூரில் செவ்வாய்க்கிழமை மத நல்லிணக்க நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
     முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாள் மத நல்லிணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. செவ்வாய்க்கிழமை ராஜீவ்காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட மன்றத்தில் மாவட்ட ஆட்சியர்(பொறுப்பு) அ. கருப்பசாமி தலைமையில் உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் சடையப்பவிநாயகமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் அ. முஸ்தபாகமால்பாட்சா(பொது), கல்யாணி(வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் ஜீனத்பானு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்: இதே போல அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மாவட்டக் குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளர் இளங்கோவன், ஆயுதப்படை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன், தனிப்பிரிவு ஆய்வாளர் இளஞ்செழியன், காவல் கண்காணிப்பாளரின் நேர்முக உதவியாளர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai