சுடச்சுட

  

  100 நாள் வேலைத் திட்டத்தில்  பணி வழங்கக் கோரி  ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

  By  அரியலூர்  |   Published on : 21st August 2013 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கக் கோரி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
   மேலும், இத்திட்டத்தில் தொழிலாளர்களுக்கு முழுக் கூலி ரூ.148 வழங்க வேண்டும் என கோரி நடந்த இந்த போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் சி. சந்திரன் தலைமை வகித்தார்.
   இதில் ஜயங்கொண்டம் சி. உத்திராபதி, செந்துறை கந்தசாமி, திருமானூர் சுப்பிரமணியன், தா.பழூர் ராதாகிருஷ்ணன், அரியலூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் ஏ. சவுரிராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   போராட்டத்தில் ஈடுபட்ட 95 ஆண்கள், 93 பெண்கள் உள்ளிட்ட 188 பேரை அரியலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் தொல்காப்பியன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai