சுடச்சுட

  

  அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகமும், டால்மியா சிமென்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய உலகத் தாய்ப்பால் வார விழா ஓட்டக்கோவில் கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.

  நிகழ்ச்சிக்கு அரியலூர் வட்ட  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் தமிழரசி தலைமை வகித்துப் பேசும் போது: தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் போதிய நோய் எதிர்ப்பு சக்தியுடன் வளர்வதோடு மட்டுமல்லாமல் தாயுடன் ஒரு பாசப் பிணைப்புடன் வளர்கிறது. தாய்ப்பால் ஊட்டப்படாத குழந்தைகளுக்கு சர்க்கரை நோய், மற்றும் ரத்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றார்.

  நிகழ்ச்சியில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு ஏதுவான உணவு வகைகள் தயாரிப்பது பற்றி குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் செயல் முறை விளக்கம் அளித்தனர்.

  மேலும் ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரோக்கிய குழந்தைகள் போட்டி நடத்தப்பட்டு சிறந்த குழந்தைகளை பராமரிக்கும் தாய்மார்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. டால்மியா சிமென்ட் நிறுவனம் மூலம் இரும்பு மற்றும் புரதச்சத்து  மருந்துகள் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹோப் நிறுவன அரும்பு செய்திருந்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai