சுடச்சுட

  

  மழைக் காலங்களில் வீணாகும் நீரைச் சேமிக்க ஆணைவாரி ஓடையில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

  இது தொடர்பாக அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ்.எஸ். கணேசன்  அரியலூர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பது:

  அரியலூர் மாவட்டம், ஆணைவாரி ஓடையில் மழைக் காலங்களில் வரும் வெள்ள நீர் வீணாக கடலில் கலக்கிறது. கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு குழுமூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் வருவதற்காகவும், மணப்பத்தூர் மற்றும் சோழன்குடிக்காடுகளுக்கு தண்ணீர் வருவதற்காகவும் ஆணைவாரி ஓடையில் தடுப்பணை கட்டுவதற்கும், வரத்து வாய்க்கால் வெட்டுவதற்கு ஒரு திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது.

  ஆனால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. அந்தத்திட்டத்தின் படி ஒரு பெரிய தடுப்பு கட்டி மேற்கண்ட ஏரிகளில் தண்ணீர் கிடைக்க உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

  மேலும் ஆணைவாரி ஓடையில் 6 இடங்களில் தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயிகளும் பயன் அடைவர்.

  வெள்ளாற்றில் இருந்து வாய்க்கால் வெட்டி தளவாய் பெரிய ஏரிக்குத் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. தற்போது அதுவும் தூர்ந்து விட்டது.

  வெள்ளாற்றில் தடுப்பணை இல்லாததால் ஏரிக்கு தண்ணீர் வரத்து முற்றிலுமாக நின்று விட்டது. வெள்ளாற்றில் உடனடியாக தடுப்பணைகள் கட்டி, வரத்து வாய்க்காலை தூர்வாரி ஏரிக்கு தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai