சுடச்சுட

  

  கல்லங்குறிச்சி பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்த ஊராட்சி கூட்டத்தில் முடிவு

  Published on : 22nd August 2013 01:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டம், கல்லங்குறிச்சி ஊராட்சி பள்ளிக்கு ரூ. 3 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி ஏற்படுத்த மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  அரியலூர் மாவட்ட ஊராட்சியின் சாதாரணக் கூட்டம் மாவட்ட தலைவர் தனலட்சுமி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பில் கல்லங்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆழ்குழாய் கிணறு மற்றும்  பம்ப்செட் அமைப்பது, தா. பழூர் ஊராட்சி ஒன்றியம், மருதையாறு வடிநிலக் கோட்டத்திற்குள்பட்ட நீர்வள ஆதாரத்துறை பொன்னாறு வாய்க்கால் சீரமைரப்புப் பணி நடவடிக்கையாக முட்டுவாஞ்சேரி பொன்னாறு கீழ் போக்கியை சீரமைக்க வெள்ளசேத நிதி ரூ. 2 லட்சம், மாவட்ட ஊராட்சி நிதி ரூ. 1 லட்சம் என ரூ. 3 லட்சம் ஒதுக்குவது, செந்துறை தாலுகா மருவத்தூர் ஊராட்சி சேடக்குடிக்காடு- மருவத்தூர் வரை 225 மீட்டருக்கு ரூ. 2,50,000 மதிப்பில் இரண்டடுக்கு தார்ச் சாலை அமைப்பது, கோடாலிக்கருப்பூர் ஏழுகண் மதகை சீரமைக்க வெள்ள சேத

  நிதி ரூ. 2 லட்சம், மாவட்ட ஊராட்சி நிதி ரூ. 5 லட்சம், ஒன்றியப் பொதுநிதி ரூ. 3 லட்சம் என ரூ. 10 லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொள்வது, நீராதாரப் பணிக்காக மாவட்ட ஊராட்சி நிதியில் இருந்த ரூ. 6 லட்சம்  ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டதை அங்கீகரிப்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

  கூட்டத்துக்கு துணைத்தலைவர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் தனபால், ராமஜெயம், பவானி, தேன்மொழி, அர்ச்சுனன், இந்திராகாந்தி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்துறை அஞ்சுகம், ஜயங்கொண்டம் சேகர், உதவித்திட்ட அலுவலர் பிரேமாவதி, செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai