சுடச்சுட

  

  கடலூர் மாவட்டம் கஞ்சங்கொல்லை கிராமத்தில் உள்ள ஆதிபராசக்தி கோவிலில் செவ்வாய்க்கிழமை நடந்த கஞ்சி கலையம் எடுக்கும் விழாவில் வழங்கப்பட்ட கஞ்சியை சாப்பிட்ட பக்தர்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டது.

  கஞ்சிக் கலையம் எடுக்கும் விழாவின் போது பக்தர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. இதை வீட்டிற்கு எடுத்து வந்த ஜயங்கொண்டம் அருகே உள்ள வீரசோழபுரத்தைச் சேர்ந்த மக்கள் உறவினர்களுக்கு வழங்கியும் தாங்களும் குடித்துள்ளனர். புதன்கிழமை காலை முதல் ஒவ்வொருவருக்காக வாந்தி பேதி ஏற்பட்டது. வீரசோழபுரம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ்(28), கோவிந்தன்(30), சரோஜா(40), சுதா(24), கெüரி(14), ராணி(27), தெய்வானை(35), பிரேம்ராஜ்(15), ஆனந்தவள்ளி(35) உள்ளிட்ட 14 பேர் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையிலும், மீன்சுருட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 11 பேரும் சிகிச்சை பெற்றனர். இது குறித்து ஜயங்கொண்டம் வட்டாட்சியர் முகுந்தன் விசாரிக்கின்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai