சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

     ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாகுடி 5-வது வார்டில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் பற்றாக்குறை இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் வியாழக்கிழமை காலை சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் காலிக்குடங்களுடன் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். 

    தகவலறிந்த ஜயங்கொண்டம் வட்டாட்சியர் முகுந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர் சபாநாயகம், மீன்சுருட்டி காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், ஒன்றியக்குழு உறுப்பினர் கஸ்தூரி முருகன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு வாரத்தில் ஆழ்குழாய் கிணறு அமைப்பதாகவும், அதுவரை லாரி மூலம் குடிநீர் வழங்குவதாகவும் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai