சுடச்சுட

    

    கோவில்சீமை கிராமத்தில் வயிற்றுப்போக்கால் 5 பேர் பாதிப்பு; முதியவர் மரணம்

    By ஜயங்கொண்டம்  |   Published on : 23rd August 2013 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோவில்சீமை கிராமத்தில் வயிற்றுப்போக்கால் 5 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் முதியவர் ஒருவர் உயிரிழந்ததால் அவரது இறப்புக்கு குடிநீர் காரணமா? என கண்டறிய தண்ணீர் ஆய்வுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

    தா.பழூர் ஊராட்சி ஒன்றியம் கடம்பூர் ஊராட்சியை சேர்ந்த கோவில்சீமை கிராமத்தில் 130 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஊராட்சி சார்பில் விநியோகிக்கப்படும் குடிநீர் உப்பு நீராக இருப்பதால் பொதுமக்கள் அருகில் உள்ள மருதையாற்றின் கரையில் அமைக்கப்பட்டுள்ள கை பம்பில் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

     இந்நிலையில் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்ட நீர் மருதையாற்றிலும் திறந்து விடப்பட்டது. இதில் கை பம்பு அடித்து செல்லப்பட்டது. இதனால் மக்கள் குடிநீருக்காக ஆற்றின் நடுவே குழிதோண்டி ஊற்று நீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

     இந்நிலையில் புதன்கிழமை காலையில் அந்த கிராமத்தை சேர்ந்த கந்தசாமி(65), மெய்யப்பன் மகன் சத்தியமூர்த்தி(7), சாமிநாதன் மகன் மாதவன்(7), செந்தில்வேல்(52), கவிதா(25),வேலம்மாள்(59) ஆகிய 5 பேருக்கும் வாந்தி பேதி ஏற்பட்டு விக்கிரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

     இதில் கந்தசாமி மேல்சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வலியுறுத்தினர். ஆனால் அதற்கு உறவினர்கள் முன் வராததால் மீண்டும் கோவில்சீமை கிராமத்திற்கு கோண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

     இச்சம்பவம் குறித்து தகவலறிந்த உடையார்பாளையம் கோட்டாட்சியர் கஸ்தூரி, தா. பழூர் ஒன்றியக்குழு தலைவர் ஜெயசுதா சிவசுப்பிரமணியன் ஆகியோர் கிராமத்திற்கு சென்று உடனடியாக குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்து, ஜயங்கொண்டத்தில் இருந்து லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தனர். மேலும் வட்டார தலைமை மருத்துவர் தட்சிணாமூர்த்தி தலைமையிலான மருத்துவ குழுவினர் கிராமத்தில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர்.  சுகாதாரமற்ற குடிநீரால்தான் அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? என கண்டறிய கோட்டாட்சியர் கஸ்தூரி தண்ணீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai